Movie News

சைவம் படத்தை வெளியிட தடைவிதித்தது நீதிமன்றம்

சைவம் படத்தை வெளியிட தடைவிதித்தது நீதிமன்றம்
சைவம் படத்தை வெளியிட தடைவிதித்தது நீதிமன்றம்
தலைவா படத்தை அடுத்து விஜய் இயக்கும் சைவம் திரைப்படம் இம்மாதம் திரைக்கு வரவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை இயக்குநர் விஜய் செய்து வரும்நிலையில், எஸ்.ஜி.பிலிம் நிறுவனத்தின் இயக்குநர் பி.ராமதாஸ் சைவம் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்குமாறு சென்னையில் உள்ள 12-ஆவது உதவி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில் சைவம் திரைப்படத்தை வெளியிட ஏப்ரல் 17-ஆம் தேதி வரை தடை விதித்து சென்னையில் உள்ள 12-ஆவது உதவி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சைவம் படத்துக்கு தடை விதிக்குமளவுக்கு என்ன பிரச்சனையாம்?

எஸ்.ஜி.பிலிம் நிறுவனத்தின் இயக்குநர் பி.ராமதாஸ் தாக்கல் செய்த மனுவில்... “எங்கள் நிறுவனத்துக்கு படம் இயக்கித்தருவதாக இயக்குநர் ஏ.எல்.விஜய் சொன்னதன் அடிப்படையில் விஜய்க்கு எங்கள் நிறுவனம் 1.5 கோடி முன்பணம் கொடுத்தது. நாங்கள் அளித்த பணத்தை வைத்து தன் தந்தை ஏ.எல்.அழகப்பன் பெயரில் சைவம் என்ற படத்தை தயாரித்துள்ளார் விஜய். இந்தப் படத்தை இயக்குநர் விஜய் இயக்கியுள்ளார்.



சைவம் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு முன்பு பணத்தைத் தருவதாக அவர்கள் வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால், இசை வெளியீட்டு விழா முடிந்தும் எங்கள் பணத்தை திருப்பித் தரவில்லை. தற்போது படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். படத்தை வெளியிட்டால் எங்களது பணத்தை திருப்பித் தர மாட்டார்கள். எனவே, எங்களுக்கு பணம் தரும் வரை சைவம் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்” என்று அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு 12-ஆவது உதவி சிவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஏப்ரல் 17-ஆம் தேதி வரை சைவம் படத்தை வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டார். சைவம் படத்தை மே மாதம் வெளியிடும் திட்டத்தில் உள்ளதால், அதற்கு முன்னதாக இந்த வழக்கு சம்மந்தமான பிரச்சனையை சுமுகமாக முடித்துவிடும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக இயக்குநர் விஜய் தரப்பு கூறுகிறது.

Post Your Comments

Next Post
Newer Post
Previous Post
Older Post

Do you like this ?