நடிகர் சூர்யா குறித்து நான் எதுவும் கூறவில்லை நடிகை கரீனா கபூர் மறுப்பு |
இதை தொடர்ந்து கரீனா கபூர் கூறியதாவது:-
இது போன்ற ஆதாரமற்ற கதைகள் எங்கிருந்து வருகிறது என்று எனக்கு தெரியவில்லை.
சூர்யாவை தெரியாது என்று நான் சொல்லவில்லை. அவரை சந்திக்கவில்லை என்றுதான் கூறினேன். எனது பேட்டி திரித்து வெளியிடப்பட்டுள்ளது. சூர்யா முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவரை நான் மதிக்கிறேன்.
அஞ்சான் படத்தில் ஒரு பாடலுக்கு நான் குத்தாட்டம் ஆடுவதாக செய்திகள் வந்ததால் அதற்கு மறுப்பு சொல்ல நேர்ந்தது. அந்த படத்தில் நான் நடிக்க வில்லை.இந்தி தவிர தென் இந்திய மொழி படங்கள் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடிக்க எனக்கு விருப்பமில்லை
சூர்யா நடித்த சிங்கம் 2 படத்தின் இந்தி ரீமேக்கில் நான் நடித்து வருகிறேன். அப்படி இருக்க அவரை தெரியாது என்று எப்படி கூறுவேன்.
சூர்யா திறமையான நடிகர். இந்தி படத்தில் அவர் நடித்தால் நானும் அவரோடு இணைந்து நடிக்க தயாராக இருக்கிறேன். இவ்வாறு கரினா கபூர் கூறினார்